2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

உலகநாச்சியின் சிலை பிரதிஷ்டை

Thipaan   / 2014 செப்டெம்பர் 15 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு, மண்முனையை ஆட்சி செய்த பெண் சிற்றரசி உலகநாச்சியின் சிலை மற்றும் காசிலிங்கம் என்பன மண்முனை குளத்தின் அருகே இன்று திங்கட்கிழமை(15) பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு ஆரையம்பதி இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் எஸ். லோகநாதனின் தலைமையில் இடம்பெற்றது.

ஆற்றல் பேரவையின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பூ. பிரசாந்தன் ஏற்பாட்டில் இச்சிலை நிறுவப்பட்டுள்ளது.

சிலையை வடிவமைத்தவர் ஆரையம்பதியைச் சேர்ந்த  ரூபன் என்பவராவார். சிலை நிறுவப்பட்டுள்ள காணியை சோமசுந்தரம் பொன்னம்மா இலவசமாக வழங்கியுள்ளார்.

மண்முனைப்பற்று பிரதேசசபை செயலாளர் ஜெயமணி அருட்பிரகாசம் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் மு. பஞ்சாட்சரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கி;. மு. 312ஆம் நூற்றாண்டளவில் மண்முனையை இராட்சியமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த உலகநாச்சியின் கோட்டையும் சிற்றரசியால் அமைக்கப்பட்ட காசி லிங்கேஸ்வரர் ஆலயமும் போத்துக்கீசரால் உடைக்கப்பட்ட எச்சங்கள் கோவில்குளம் சிகரம் பிரதேசத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X