2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொத்தானை, புணானை மேற்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பொத்தானை மற்றும் புணானை மேற்கு மக்களின்  பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மாவட்ட செயலகத்தில் நேற்று  திங்கட்கிழமை (15) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொத்தானை மற்றும் புணானை மேற்கு மக்களின் காணிகளுக்கு சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொள்வது, மீள்குடியேறுவதிலுள்ள வன இலாகாவினருடைய பிரச்சினை உட்பட பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன.

2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட பொத்தானை மக்களுக்கு, அச்சம்  மற்றும் வசதியின்மை காரணமாக அங்கு  மீள்குடியேறுவதில் பிரச்சினைகள் காணப்பட்டுவந்தன. ஆனால், தற்போது அங்கு மீள்குடியேறுவதற்கான வேலைகளில் ஈடுபடும்போது வன இலாகாவினரால்  பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுவருவதாக  முறையிடப்பட்டது.

இப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக வன இலாகாவினருடன்; மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்வதென்பதுடன்,  மீள்;குடியேறும் மக்களுக்கு வசதிகளை செய்துகொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, புணானை மேற்கு கிராம அலுவலகர் பிரிவு மக்கள் விவசாயத்தில் ஈடுபடும்போது சட்ட ரீதியாக பெற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் கிடைக்கக்கூடிய விடயங்கள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு, விவசாயச்செய்கையில் ஈடுபடும் மகாவலி பி வலயத்துக்குட்பட்ட காணிகளுக்கு சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையில் அதிகாரசபையுடன் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

பொத்தானை, புணானை மேற்கு பிரதேசங்களிலுள்ள  இப்பிரச்சினைகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையிடம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தலைவர் வ.கமலதாஸ் மற்றும் உறுப்பினர்கள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்தை அணுகி இப்பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.  

அமைச்சர் பசீர் சேகுதாவூத் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X