2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கடும் காற்றினால் வீடுகள், அலுவலகங்கள் சேதம்

George   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் திங்கட்கிழமை(15) வீசிய கடுங்காற்று காரணமாக 4 வீடுகள், 4 பொது மக்கள் சேவை அலுவலகங்கள் உட்பட கோயிலொன்றும் சேதமடைந்துள்ளது.

வவூணதீவூ பிரதேச செயலகத்துக்குட்பட்ட குறிஞ்சாமுனையில் இந்த கடுங்காற்று வீசியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

குறிஞ்சாமுனைக் கிராமத்தில் 4 வீடுகள் பகுதியளவிலும் நீர்ப்பாசனத் திணைக்கள அலுவலகம், கணனி வள நிலையம், காயான்மடு பிள்ளையார் ஆலயம் என்பனவும் சேதமடைந்திருப்பதாக குறிஞ்சாமுனைக் கிராம சேவையாளர் பி.குருபரன் கூறினார்.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று  பார்வையிட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.எம்.கசீர் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X