2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இலவச சிகிச்சை

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலையிலுள்ள சமூகப் பராமரிப்பு நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16)  செவிப்புலன் அற்ற, வாய் பேசமுடியாத, அவயவங்களை இழந்த மற்றும் செயலிழந்த 50 இற்கும் மேற்பட்டோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டதாக   நம்பிக்கை ஏணி   நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் எல்.ஆர்.டேவிட் தெரிவித்தார்.

இதன்போது  வைத்திய சேவையுடன் இயன் மருத்துவப் பயிற்சி, பேச்சுப்பயிற்சி, செவிமடுக்கும் பயிற்சி, நடைப்பயிற்சி அளிக்கப்பட்டன. அத்துடன் 16 பேருக்கு  செயற்கைக்கால்கள்; பொருத்தப்பட்டதுடன், இருவருக்கு  செவிமடுக்கும்; கருவிகள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சிகளையும் சிகிச்சையையும்  'நவஜீவன' அமைப்பின் பேச்சு மற்றும் மொழிப்பயிற்சி மருத்துவ நிபுணர்  திருமதி மீற் சஞ்ஜனா எதிரிவீர, காதுகேள் மருத்துவ நிபுணர் பிரிந்திகா ஹேவகே,  இயன் மருத்துவர்  ரீ.பி.என்.கீத்குமார, வி.கே.என்.விந்தியா, செயற்கை அவயவ நிபுணர்  எச்.ஆர்.பிரசன்யா ஆகியோர் வழங்கினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X