2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தேசிய ஐக்கிய பாலத்தை நிர்மாணிக்கும் காலம் இது: பஷீர்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


துயர் தோய்ந்த பாதையை கழுவித் துப்புரவாக்கிவிட்டு தேசிய ஐக்கியம் என்ற பாலத்தை நிர்மாணிக்கின்ற காலம் இதுவென உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள ஏறாவூர் அல் அஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் புதிய  அலுவலக கட்டடத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (16)  அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'தேசிய ஐக்கியம் என்ற பாலத்தினூடாக எல்லா இனங்களும் பயணித்து பிரமாண்டமான அபிவிருத்தியை அடைகின்ற வாய்ப்பை நாம் இப்போது பெற்றுள்ளோம்.  இலங்கையிலுள்ள எல்லாச் சமூகங்களும் தேசிய ஐக்கியம் என்ற ஒரே வலையில் தங்களை தக்கவைத்துக்கொண்டு ஒன்றாக எழுந்து பறக்க முயற்சிக்கவேண்டும்.

ஒரு காலத்தில் ஒன்றாக இன்ப, துன்பங்களில் பங்குபற்றியும்  ஓடியாடி விளையாடியதுடன், பின்னர் முரண்டு பிடித்து பிரிவினை கோரி, இரத்தக்கறையில் துவண்டு இப்போது மீள்ளெழுந்து நிற்கின்றோம். முரண்பட்டுப் பிரிந்து, இழந்து, ஏங்கித் தவித்து நின்ற துர்திஷ்டத்தை விரட்டியடித்து ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடிக்கின்ற காலம் இது.

அரசியல், சமூக, பொருளாதார, அபிவிருத்தி என்று எல்லாமே ஆரோக்கியமாக மாறுகின்ற சூழ்நிலைக்குள் நாம் காலடி எடுத்துவைத்துள்ளோம்.
எல்லா இனங்களும் சேர்ந்து சமூக எழுச்சியுடன் கூடிய பாரிய நகர்வுக்கு படையெடுக்கின்ற சூழ்நிலைக்குள் நாங்கள் எங்களை தயார்படுத்தவேண்டும்.  அந்த மாற்றமும் மேம்பாடும் காண்கின்ற அரசியல், பொருளாதார அபிவிருத்தி வருகின்றபோது நாங்கள் எங்கள் சமூகத்தின் பங்கையும் அதிலிருந்து பெற்றுக்கொள்ளத்  தகுதியானவர்களாக எங்களை தயார்படுத்தவேண்டும்.

மடத்தமான அரசியல் தவறுகளை தொடர்ந்து விடுகின்றதொரு சமூகமாக மீண்டும் நாம் எம்மை அடையாளம் காட்டாமல் நிதானித்து காய் நகர்த்தவேண்டும். இந்தச் சமூகம் ஒற்றுமைப்படுவதை முதன்மையாகக் கொண்டு எத்தனை மில்லியன் ரூபாய்யையும் அரசிலிருந்து பெற்றுவந்து இந்தச் சமூகத்துக்கு  வேண்டிய அபிவிருத்திகளைச் செய்ய   என்றும்; நான் தயாராக உள்ளேன்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X