2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி மீளாய்வு கூட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 16 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு  வாழைச்சேனை பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம், வாழைச்சேனை பிரதேச செயக கேட்போர் கூடத்தில் செவ்வாய்கிழமை(16) இடம் பெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தற்போதைய மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான எஸ்.சந்திரகாந்தன் தலைமையில்  இடம்பெற்ற இக்கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டது.

பிரதேச செயலாளர் தினேஸ் தெட்சணாகௌரி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன் இணைப்பாளர்களான பி.தவேந்திரராஜா, ஏ.தேவராஜா மற்றும் வாழைச்சேனைப் பிரதேச செயலக அதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள், கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உதத்தியோகத்தர்கள், சமூர்த்தி அலுவலர்கள், கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் உறுப்பினர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X