2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

புதிய வீதி திறந்துவைப்பு

Super User   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
- எஸ்.பாக்கியநாதன்


வாகரைப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இறால் ஓடைப் பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதி, மக்களின் பாவனைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (16) திறந்து வைக்கப்பட்டது.

கடந்த கால யுத்தத்தினால் முற்றாகப் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்தின் புதிய வீதியை, முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் திறந்து வைத்தார்.

காட்டு வழிப்பாதை மூலம் மிகவும் சிரமத்தின் மத்தியில் பயணித்த மக்களுக்கு, கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு மில்லியன் செலவில் இப்பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வாகரை பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், இணைப்பாளர்களான ப.தவேந்திரராஜா, ஆர்.தேவராஜா மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X