2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகரை பிரதேச அபிவிருத்திக் கூட்டம்

Super User   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


 - எம்.எஸ்.எம்.நூர்தீன்

 
வாகரைப் பிரதேசத்தில் இடம்பெற்று வரும் அபிவிருத்திச் செயற்பாடுகளின் நிலை குறித்த மீளாய்வுக் கூட்டம கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவருமான சி.சந்திரகாந்தன் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) வாகரைப் பிரதேச செயகத்தில் நடைபெற்றது.
 
இக் கூட்டத்தில் வாகரைப் பிரதேசத்தின் அபிவிருத்தி பற்றி மீளாய்வு செய்யப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் ஆராயப்பட்டன.
 
இதன் போது விஷேட அபிவிருத்தி திட்டம் மற்றும் வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திட்டம், கிராமத்திற்கு ஒரு வேலைத்திட்டம் போன்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் விஷேட கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டது.
 
இக் கூட்டத்தில் வாகரைப் பிரதேச பிரதேச செயலாளர் ராகுலநாயகி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், இணைப்பாளர் மற்றும் வாகரைப் பிரதேச செயலக வெளிக்கள உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X