2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'புதிய காத்தான்குடி அபிவிருத்திக்குழு' அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 17 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 'புதிய காத்தான்குடி அபிவிருத்திக்குழு'  நேற்று செவ்வாய்க்கிழமை (16) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, புதிய காத்தான்குடி அபிவிருத்திக்குழுவுக்கான நிர்வாகிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.

இந்தக் குழுவின் தலைவராக காத்தான்குடி நகரசபை உறுப்பினர் எச்.எம்.எம்.பாக்கீர், செயலாளராக எம்.எம்.குதுப்தீன், பொருளாளராக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.எஐ.எம்.இர்பான், உபதலைவர்களாக வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.எஸ்.எம்.அப்துல்லாஹ் மற்றும் ஏ.எல்.டீன் பைறூஸ், உபசெயலாளராக எஸ்.எம்.முகைதீன் சாலி ஆகியோருடன் 07 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளும் பொருட்டு அவரின் வழிகாட்டலில் இந்த அபிவிருத்திக்குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  அபிவிருத்திக்குழுவின் தலைவரும் காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான எச்.எம்.எம்.பாக்கீர் தெரிவித்தார்.

ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹெப்பி கிட்ஸ் பாலர் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரதேச முக்கியஸ்தர்கள், சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X