2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


காத்தான்குடியிலுள்ள வாவிகளில் பிடிக்கப்படும் மீன்களை உட்கொள்ளக்கூடாது என்று வதந்தி பரவுவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியும் வதந்தியை நம்பவேண்டாம் எனக் கூறியும் மீனவர்கள் திங்கட்கிழமை (22) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்தான்குடியிலுள்ள மீனவர் சங்கங்கள் மற்றும் மீனவர்கள் இணைந்து காத்தான்குடி அல் அக்ஸா மீனவர் சங்கக்கட்டடத்துக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

'பொய்யான தகவல்களை நம்பாதீர்கள்', 'மீனவர்களின் வயிற்றில் அடியாதீர்கள்', 'வதந்தியால் மீனவர்களின் குடும்ப வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது', 'கூலர் மீன்களை விற்பனை செய்வதால் மட்டக்களப்பு வாவி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்' உள்ளிட்ட  வாசகங்கள் எழுதப்பட்ட  அட்டைகளை  மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது தாங்கியிருந்தனர்.

இது தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.ரி.டொமின்கோ ஜோர்ஜிடம் கேட்டபோது,  வாவிகளில் உள்ள  மீன்களை உட்கொள்ளக்;கூடாது என்று தெரிவிக்கப்படுவது வதந்தியேயாகும். இதை பொதுமக்கள் நம்பவேண்டாம் என்பதுடன்,  மீன்களுக்கு எந்தவித  நோயுமில்லை எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வையிடம் கேட்டபோது, வாவிகளில் உள்ள  மீன்களை உட்கொள்ளக்கூடாது என எந்தவொரு அறிவித்தலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையால் விடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X