2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சமூக பராமரிப்பு நிலையப்பிரிவு திறப்பு

Suganthini Ratnam   / 2014 ஒக்டோபர் 15 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கறுவாக்கேணியில் சிறுவர்களுக்கான சமூக பராமரிப்பு நிலையப்பிரிவு நேற்று செவ்வாய்க்கிழமை (14)  திறந்துவைக்கப்பட்டதாக எஸ்கோ  நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஸ்பிரித்யோன் தெரிவித்தார்.

ஐரோப்பின் ஒன்றியம் மற்றும் வோர் சைல்ட் ஹொலண்ட் அமைப்பின் நிதியுதவியில்; இந்த நிலையம் அமைக்கப்பட்டது.

இதன்போது வோர் சைல்ட் ஹொலண்ட் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் மரீனாடொரீஸ் மூலமாக செயற்றிட்டம் அறிமுகம் செய்யப்பட்டதுடன், 154,000 ரூபாய் பெறுமதியான கணினிகளும் அலுமாரிகளும் வழங்கப்பட்டன.  அத்துடன், சிறுவர்களுக்கான பராமரிப்பு பற்றிய எஸ்கோ நிறுவனத்தின் செயற்றிட்ட கோவையும் கையளிக்கப்பட்டது.

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் தெட்சணாகௌரி தினேஸ், வோர் சைல்ட் ஹொலண்ட் அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் மரீனாடொரீஸ்;, எஸ்கோ நிறுவனத்தின்; உத்தியோகஸ்;தர்கள், கிராம சேவகர்கள், சிறுவர் பராமரிப்பு உத்தியோகதஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X