2025 மே 19, திங்கட்கிழமை

இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கை

Sudharshini   / 2015 மார்ச் 22 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

கடந்த கால யுத்தம் காரணமாக மட்டக்களப்பிலிருந்து இடம்பெயர்ந்த சிங்கள மக்களை மீள் குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண ஆளுனர் ஓஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது தொடர்பாக ஆராயும் உயர் மட்ட மாநாடொன்று சனிக்கிழமை (21) மட்டக்களப்பு டேர்பா மண்பத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ஓஸ்ரின் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்றது.

கடந்த கால யுத்தம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவிலிருந்து இடம்பெயர்ந்த 63 சிங்கள குடும்பங்கள், மீள் குடியேறுவதுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் மீள்குடியேற்றப்படாமல், சம்பூர் போன்ற பிரதேசங்களிலுள்ள மக்களையும் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஆளுநனர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிறிதரன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா உட்பட உயர் அதிகாரிகள் மற்றும் இடம்பெயர்ந்த சிங்கள மக்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X