2025 மே 19, திங்கட்கிழமை

காணாமல் போனவர்கள் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக வெளியிடக்கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 23 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்

இலங்கையில் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகளின்போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும என்பதை வலியுறுத்தியும் காணாமல் போனவர்கள் தொடர்பான  விவரங்களை பகிரங்கமாக வெளியிடுமாறு கோரியும் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு அருகில்  திங்கட்கிழமை (23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மட்டக்களப்பு காந்திசேவா சங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களினுடைய ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்த காலத்தின்போதும் யுத்தம் நிறைவடைந்த பின்னரும்  பலர் காணாமல் போன நிலையில்,  அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆணைக்குழுக்களின் விசாரணைகளினால் எந்தவித நன்மையும் கிட்டவில்லை என்று ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், உள்ளக விசாரணையின்போது சர்வதேச விசாரணையாளர்களை அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை  விடுத்தனர்.

அத்துடன்,  காணாமல் போனவர்கள் தொடர்பில் இதுவரையில்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, எட்டப்பட்ட முடிவுகளை பத்திரிகைகளில் அறிக்கையிடவேண்டும் என்றும்; இவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தற்போது நல்லாட்சி ஏற்பட்டுள்ளதாக கூறிக்கொள்ளும் நிலையில்,  காணாமல் போனவர்கள்  தொடர்பில் தமக்கு உறுதியான முடிவை இந்த அரசாங்கம் பெற்றுத்தரவேண்டும் என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X