Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 23 , மு.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
நல்லாட்சி என்று கூறும் இந்த அரசாங்கம், காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தரவேண்டிய நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்பதுடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட காந்திசேவா சங்கத்தின் தலைவர் அ.செல்வேந்திரன் தெரிவித்தார்.
இருந்தபோதிலும், இவை தொடர்பில் இதுவரையில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
இலங்கையில் மேற்கொள்ளப்படும் உள்ளக விசாரணைகளின்போது சர்வதேச கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவேண்டும என்பதை வலியுறுத்தியும் காணாமல் போனவர்கள் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக வெளியிடுமாறு கோரியும் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி பூங்காவுக்கு அருகில் திங்கட்கிழமை (23) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,
'காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 2,200 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 332 முறைப்பாடுகள் மாத்திரமே விசாரணை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், காத்தான்குடியில் 90 முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டுள்ளன. ஏனையவை தொடர்பில் விசாரணைகள் ஏதும் நடத்தப்படவில்லை.
இந்த விசாரணைகளின் முடிவு என்ன என்பது தொடர்பில் இதுவரையில் உரிய பதில் எதுவும் வழங்கப்படாத நிலையிலுள்ளது. இன்று சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்டுள்ள உள்ளக விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. இவற்றுடன் சர்வதேச விசாரணையாளர்களும் ஈடுபடுத்தப்படவேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
56 minute ago
1 hours ago