Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 24 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
–வடிவேல் சக்திவேல்
'எமது நாட்டிலிருந்து சுமார் 18 இலட்சம் மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசித்துவருகின்றார்கள். புலம்பெயர்ந்து அங்கு வாழ்கின்ற எமது தமிழ்ப் பெண்கள் வெளிநாடுகளில் பல துறைசார்ந்த நிபுணர்களாகவும் விஞ்ஞானிகளாகவும் உயர் பதவிகளில் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றார்கள்' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், சமூக சேவையில் திகழும் பெண்களை கௌரவிக்கும் நிகழ்வு, களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'மதங்கள் ரீதியாக பார்க்கின்றபோது, பெண்களுக்கு அதிகளவு முன்னுரிமை கொடுத்தது இந்துமதமே. அதேபோன்று, உலகத்திலுள்ள 3,200 இற்கும் மேற்பட்ட மொழிகளில் தமிழ்மொழி பெண்களுக்கு அதிக அந்தஸ்து வழங்கியுள்ளது. ஆனால், வார்த்தையில் பெண்களை மதிக்கின்ற தன்மை குறைவாக உள்ளது. தமிழ்மொழியோ அல்லது சமயங்களோ பெண்களை வேறாக்கவில்லை. மனிதர்களே பெண்களை வேறாக்கியுள்ளார்கள்.
கடந்தகால வரலாறுகளை புரட்டிப் பார்க்கின்றபோது, பெண்களுக்கு உரிய அந்தஸ்து, சமத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெண் விடுதலை என்பது வெறுமனே சுலோகங்களினாலும் உதடுகளினால் மட்டும் இருந்துவிட்டால் போதாது. உள்ளத்தினால் பெண்களுக்கான சுதந்திரம் வழங்கப்படவேண்டும்.' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
39 minute ago
54 minute ago