2025 மே 19, திங்கட்கிழமை

விமானப்படையினரின் மருத்துவ முகாம்

Princiya Dixci   / 2015 மார்ச் 24 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, படுவான்கரை பிரதேசத்தின் கரவெட்டி கிராமத்தில் இலங்கை விமானப்படையினரின் மருத்துவ முகாம், திங்கட்கிழமை (23) இடம்பெற்றது.

மட்டக்களப்பு விமானப்படைப் பிரிவினரின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மேற்படி வைத்திய முகாம் இடம்பெற்றதாக விமானப்படை தளத்தின் குறூப் கப்டன் அத்துல களுவாராச்சி தெரிவித்தார்.

இந்த வைத்திய முகாமில் குறூப் கப்டன் அத்துள களுவாராச்சி, ஸ்குவாட்ரன் (Squadron) லீடர் ஜே.அமரசிங்ஹ, விமானப்படை வைத்திய அதிகாரிகள் மற்றும் விமானப்படை உத்தியோகஸ்தர்கள் பலர் கலந்துகொண்டு சேவை வழங்கினர்.

காலை 9.00 முதல் பிற்பகல் 4.00 மணிரை இடம்பெற்ற இச்சேவையில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருகை தந்து சுகாதார சேவையினைப் பெற்றுக்கொண்டதாக விமானப்படைத் தளத்தின் குறூப் கப்டன் அத்துல களுவாராச்சி தெரிவித்தார்.

மட்டக்களப்பு விமானப்படைப் பிரிவு ஆரம்பித்து எதிர்வரும் 27ஆம் திகதியுடன் 32 வருடங்கள் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X