2025 மே 19, திங்கட்கிழமை

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை

Kogilavani   / 2015 மார்ச் 27 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

துவிச்சக்கர வண்டிகளுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை வியாழக்கிழமை(26) மாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டது.

'விபத்துக்கள் அற்ற நாடு' என்ற கருப்பொருளில் துவிச்சக்கர வண்டிகளில் இந்த ஸ்டிக்கர்களை ஒட்டும் நடவடிக்கை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல இடங்களில் நடைபெற்றது.

வீதியினால் சென்ற துவிச்சக்கர வண்டிகள் பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

காத்தான்குடி பொலிஸ் பிரிவில் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள மீராபாலிகா மகா வித்தியாலய சந்தியில் இடம்பெற்றது.

காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி ஏ.துசார மற்றும் பொலிஸார் இதில் கலந்துகொண்டனர்.

இதேபோன்று மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸாரினால் ஸ்டிக்கர் ஒட்டும் நடவடிக்கை மட்டக்களப்பு ஜி.வி.வைத்தியசாலைக்கு முன்பாக இடம் பெற்றது.

உழவு இயந்திரம், முச்சக்கர வண்டி போன்றவற்றுக்கும் இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவே இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X