2025 மே 19, திங்கட்கிழமை

உணவு ஒவ்வாமைக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 80ஆக அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2015 மார்ச் 27 , மு.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் தாழங்குடா பிரதேசத்தில் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக  ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் நாகலிங்கம் சுசில் தெரிவித்தார்.

நேற்று வியாழக்கிழமை மாலையும் இன்று வெள்ளிக்கிழமையும் உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்டவர்கள்  ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இதில் ஐந்து பேரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றியுள்ளதாகவும்  அவர் கூறினார்.

தாழங்குடா பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை நடைபெற்ற திருமண வீடொன்றில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டோரில் சிலர், உணவு ஒவ்வாமையினால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவற்றுக்கு உள்ளாகினர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில்  வியாழக்கிழமை காலை முதல் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர்.

மண்முனை மற்றும் தாழங்குடா, ஆரையம்பதி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களில் பெரியோர், சிறுவர்கள், குழந்தைகள் எனப் பலரும் அடங்குகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X