2025 மே 19, திங்கட்கிழமை

சட்டவிரோத ஆஸி. பயணம் தொடர்பில் விழிப்புணர்வூட்டல்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 27 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்வதனால் ஏற்படும் இழப்புகள் பற்றி விபரிக்கும் விழிப்புணர்வு ஊர்வலம்,  இன்று வெள்ளிக்கிழமை (27) மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

ஊர்வலத்தின்போது சட்டவிரோத குடியேற்றங்களால் ஏற்படும் தீமைகள் பற்றி ஒலிபெருக்கி மூலமும் அறிவிக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு செயற்பாடுகளின் பின்னர், சட்டவிரோத குடியேற்றங்கள் முற்றாக தடை மற்றும் இதை மீறி செல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விபரங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X