2025 மே 19, திங்கட்கிழமை

கசிப்புடன் இரண்டு பெண்கள் கைது

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆர்.ஜெயஸ்ரீராம்

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்களான இரண்டு பெண்களை கல்குடா பொலிஸார் வெள்ளிக்கிழமை (27) கைது செய்துள்ளதாக, கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக்க நவரெட்ன தெரிவித்தார்.

அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த விஷேட வேலைத்திட்டத்தின் பிரகாரம் மேற்படி சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் அவர்கள் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய  பொருட்களும் கசிப்புடன் கூடிய கொள்கலன்கள் மற்றும் கோடா போன்றவற்றை கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.

சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடடிவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X