2025 மே 19, திங்கட்கிழமை

ஏறாவூர் நகரசபை உறுப்பினராக நஸீர் பதவியேற்பு

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஏறாவூர் நகர சபையின் புதிய உறுப்பினராக பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்; எம்.எஸ்.எம். நஸீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏறாவூர் நகர சபையின் தவிசாளராக பதவி வகித்த அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர்; நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (27) பிற்பகல்  ஏறாவூர் நகரசபையின் புதிய  உறுப்பினராக எம்.எஸ்.எம். நஸீர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X