2025 மே 19, திங்கட்கிழமை

உரிமை கோரப்படாத பொருட்களின் ஏல விற்பனை

Gavitha   / 2015 மார்ச் 28 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

அரச உடமையாக்கப்பட்ட மற்றும் உரிமை கோரப்படாத பொருட்களின் ஏல விற்பனை இன்று சனிக்கிழமை (28) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டு நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட பொருட்களே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டன.

லொறி-01, துவிச்சக்கர வண்டிகள், சட்டவிரோதமாக மின்சாரம் பெறுவதற்கு பாவிக்கப்பட்ட மின் வயர்கள், கசிப்புக்காய்ச்சும் உபகரணங்கள், வெற்று மதுசாரப் போத்தல்கள், சீல் வைக்காத நிறுவை உபகரணங்கள் என்பன ஏலத்தில் விடப்பட்டன.
இரும்பு வியாபாரிகளும் மற்றும் பொது மக்களும் கலந்து கொண்டு ஏலம் வைத்து பொருட்களைப் பெற்றுக்கொண்டனர்.

வாவியில் மீன் பிடிப்பதற்குப் பாவிக்கப்பட்ட சட்ட விரோத தங்கூசி வலைகளை எரிக்குமாறு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாஹ் உத்தரவிட்டார்.

நீதவான் நீதிமன்றப் பதிவாளர் ஏ. புவனேந்திரன், உயர் நீதிமன்றப் பதிவாளர் பிரதிநிதி ரி. ஜோசப் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X