Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Sudharshini / 2015 மார்ச் 28 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
வாழைச்சேனை கடதாசி ஆலை ஊழியர்கள் தங்களது சம்பள நிலுவைப் பணத்தை வழங்குமாறு கோரி, சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை 14ஆவது நாளாக இன்று சனிக்கிழமையும் (28) மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 25ஆம் திகதி ஆலை தவிசாளரினால் தொலை நகல் ஒன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படடிருந்தது.
அதில் நிலுவைப் பணத்தை வியாழக்கிழமை (26) அல்லது வெள்ளிக்கிழமை(27) வழங்குவதுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் நேற்று வெள்ளிக்கிழமை (27) சம்பள நிலுவைப் பணம் வழங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தது.
மேலும், 2015ஆம் ஆண்டுக்கான 3 மாத கால நிலுவைச் சம்பளப்பணம் வாழைச்சேனை ஆலையின் வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக கொழும்பு தலைமைக் காரியாலயத்தின் நிர்வாகத்தினரினால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை ஆலையின் பதில் முகாமையாளர் தெரிவித்தார்.
இத்தகவலை கேள்வியுற்ற தொழிலாளர்கள் ஆத்திரம் அடைந்து ஆலையின் முன் கதவினை மூடி, டயர்களை எரித்து ஆலையின் முகாமை நிர்வாகத்தினரை வெளியில் செல்லவிடாது தடுத்து சுமார் ஒரு மணித்தியாலயம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கேள்வியுற்ற வாழைச்சேனை பொலிஸார், ஆலைக்குள் வந்து சம்பவம் தொடர்பாக தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை, 2014ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் நிலுவைப்பணம் கொழும்பு தலைமைக் காரியாலய ஊழியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே, தவிசாளரினால் உறுதியளிக்கப்பட்ட 5 மாத நிலுவை பணம் கிடைக்கும் வரை, போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று ஆலையின் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, மாவட்டத்தினை முன்னிலைப்படுத்தும் அமைச்சர்கள் கைத்தொழில் துறை வாணிப துறை அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை ஏற்று, முன்வந்து உதவவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025