2025 மே 19, திங்கட்கிழமை

சமூகத்தை முன்நோக்கி கொண்டுச் செல்ல கல்வி அவசியம்: இந்திரகுமார்

Sudharshini   / 2015 மார்ச் 28 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

எமது இனம் பல இன்னல்களை தாங்கிக் கொண்டிருக்கும் இனம். இன்றும் போராடிக் கொண்டிருக்கும் இனம். பலவகையில் பின்தள்ளப்பட்ட இனம். இந்நிலையிலிருந்து எமது சமூகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதுக்கும் எமது சமூகத்தை ஊக்குவிப்பதுக்கும் கல்விச் சமூகங்கள் முன்வந்து உதவவேண்டும் என தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கல்குடா சிங்காரத்தோப்பு சரஸ்வதி வித்திhலயத்தில் வெள்ளிக்கிழமை (27) இடம்பெற்ற வருடாந்த இல்லமெய்வல்லுனர் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவர்களுக்கு மட்டுமல்லாது அனைவரினது அறிவு வளர்ச்சிக்கும் உடல் ஆரோக்கித்துக்கும் உடற்பயற்சிகள் முக்கியமானதாகும். எனவே தான் பாடசாலைகளில் இவ்வாறான விளையாட்டுகள் மூலம் அவை ஊக்குவிக்கப்படுகின்றன.

இன்று எமது நாட்டில் பலர் நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளனர். எமது நாட்டில் 65 வீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு நீரிழிவு காணப்படுகின்றது. எமது உடல் ஆரோக்கியத்தினால் மட்டுமே நாம் நோய்களைத் தடுக்க முடியும்.

தற்போதைய நிலையில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்கள் கல்வியில் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றன. நாம் எமது 30 வருடகால போராட்டத்தில் கல்வி உட்பட சகலதையும் இழந்து தற்போது, கல்வியின் பெறுமதியை உணர்ந்து அந்த நிலையினை அடைவதற்கு இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

எனவே, இவற்றை உணர்ந்து நாம் எமது சிறார்களின் கல்விக்கு முதலிடம் கொடுத்து அதனை ஊக்குவித்து எமது சிறார்களை வளர்க்க வேண்டும். ஓர் ஆட்சிமாற்றம் இடம்பெற்றமையினாலேயே நாம் இந்த இடங்களில் வந்திருக்கின்றோம்.

இதற்கு முன்னைய அரசாங்ககாலத்தில் நாம்; எவ்வாறு புறக்கணிக்கப்பட்டோம் என்பது குறித்து எமது மக்கள் நன்கு அறிவார்கள். எமது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், சில அரச அதிகாரிகள் கூட புறக்ககணிக்கப்பட்டிருந்தனர். ஆனால், எமது மக்கள் என்றும் எம்மை புறக்கணித்ததில்லை. அவர்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மங்காத ஒளியுடன் இருந்து கொண்டே இருக்கும். அந்தவகையில் இந்த ஆட்சி மாற்றத்திற்காக ஒத்தழைத்த மக்களை எண்ணி நாம் பெருமைகொள்வதோடு அவர்களுக்கு என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம் என அவர் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X