Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 29 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்களினுள் உட்புகுந்த இரண்டு முதலைகள் மடக்கிப்பிடிக்கப்பட்ட இன்று ஞாயிற்றுக்கிழமை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் முப்பத்தாறு வீட்டுத்திட்டக் கிராமத்தினுள் உட்புகுந்த 7 அடி நீளமான முதலையொன்றை மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர் அப்புறப்படுத்தியுள்ளனர்.
கிராமத்தினுள் உட்புகுந்த முதலையை கண்ட மக்கள், பீதி அடைந்து 119 என்ற அவசரப்பிரிவு இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.
இதை தொடர்ந்து மேற்படி கிராமத்துக்கு சென்ற பொலிஸார் அங்கு காவலில் ஈடுபட்டனர். இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், முதலையை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மக்களுக்கு தொல்லை கொடுக்கமுடியாத இடமாகவும் அதேவேளை, முதலை பாதுகாப்பாக வாழும் இடத்தில் விடப்படும் என்று மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்;தர் என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.
இதேவேளை, ஏறாவூர் பிரதேசத்தின் மாவடிவேம்பு கிராமத்தினுள் புகுந்த 12 அடி நீளமான மற்றுமொரு முதலையை பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
குறித்த முதலை நாய்களை துரத்திக்கொண்டு மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த வேளையிலேயே மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மடக்கிப்பிடிக்கப்பட்ட முதலை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025