Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 மார்ச் 30 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா,எஸ்.பாக்கியநாதன்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை உடைத்தமை போன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் உடைப்பதற்கான நகர்வை ஐக்கிய தேசியக் கட்சி மேற்கொண்டுவருவதாக கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு தேர்தல் தொகுதி தமிழரசுக்கட்சிக் கிளைக்; கூட்டம், மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள அதன் காரியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (29) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தின்போது, அங்கு நடைபெற்ற நிகழ்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன. ஆனால், வடமாகாண முதலமைச்சருக்கோ, வடமாகாணசபை உறுப்பினர்களுக்கோ, வடமாகாணசபை அமைச்சர்களுக்கோ அழைப்பிதழ்கள் வழங்கப்படவில்லை. இது ஐக்கிய தேசியக் கட்சியின் பிரித்தாளும் தந்திரமாகும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் சதியில் பல சர்வதேச சதிகள் உள்ளன. அதேபோன்று, இலங்கையிலும் பல சதிகள் இருக்கின்றன. அதன் பின்னணியிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை நோக்கி பல கேள்விகள் வருகின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவேண்டும் என்ற விடயத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என்ற விடயத்திலும் தொடர்புகள் உள்ளன. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான அறிக்கையை விடுத்துக்கொண்டுள்ளனர். மக்களை ஒரு பாணியில் குழப்பும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தமிழர்கள் என்றால் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். ஐக்கிய தேசியக் கட்சியை தமிழ் மக்கள் தத்து எடுக்கவேண்டிய அவசியம் இல்லை. முஸ்லிம் காங்கிரஸை தத்து எடுக்கவேண்டிய அவசியமும் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழர்கள் வாக்களிக்கவேண்டும் என்பதை தமிழரசுக்கட்சியை சேர்ந்தவர்கள்; விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களுக்கு அக்கட்சியை விமர்சிப்பதற்கும் பிழைகளை சுட்டிக்காட்டுவதற்கும் உரிமை உள்ளது. ஆனால் வெற்றிலைக்கு வாக்களித்துவிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
49 minute ago
58 minute ago