2025 மே 19, திங்கட்கிழமை

ரயில்சேவைகளில் நேரமாற்றம்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 31 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு செல்லும் ரயில் சேவைகளில் எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து நேரமாற்றம் செய்யப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு காலை 7.15 மணிக்கு புறப்படுகின்ற உதயதேவி 7.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 4.30 மணிக்கு கொழும்பு, கோட்டையை அடையும். முற்பகல் 10.30 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்தி நோக்கி புறப்படுகின்ற  புகையிரதம் முற்பகல்  11.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.30 மணிக்கு மாகோ சந்தியை அடையும்.

மட்டக்களப்பிலிருந்து மாலை 5.45 மணிக்கு புறப்படுகின்ற  பிரயாணிகள் புகையிரதம் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கல்லோயா சந்தியில் திருகோணமலையிலிருந்து வரும் புகையிரதத்துடன் இணைக்கப்பட்டு அதிகாலை 3.45 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும். அதுபோல், வழமையாக இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து புறப்படுகின்ற  பாடுமீன் நகர கடுகதி சேவை  8.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5.10 மணிக்கு கொழும்பு கோட்டையை அடையும்;.

கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்புக்கு காலை 6.10 மணிக்கு புறப்படுகின்ற புகையிரதம் 7.15 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். இரவு 7.15 மணிக்கு கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வரும் புகையிரத நேரத்தில் மாற்றம் இல்லை. அது அதிகாலை 4.12 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும். கொழும்பிலிருந்து இரவு 9 மணிக்கு திருகோணமலை, மட்டக்களப்பு நோக்கி புறப்படும் புகையிரதம் 9.45 மணிக்கு புறப்பட்டு 7.10 மணிக்கு மட்டக்களப்பை சென்றடையும்.

மாகோவிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படுகின்ற புகையிரதம் மட்டக்களப்புக்கு மதியம் 1.35 மணிக்கு சென்றடையும். மட்டக்களப்பிலிருந்து  அதிகாலை 5.10 மணிக்கு புறப்படுகின்ற புகையிரத பஸ் கல்லோயாவை  9.02 மணிக்கு சென்றடையும் மீண்டும் அதே புகையிரத பஸ் வண்டி கல்லோயாவிலிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு மட்டக்களப்புக்கு மாலை 4.55 மணிக்கு சென்றடையும் என புகையிரத நிலைய அதிபர் ஏ.எல்.எம். அலீவா மேலும் தெரிவித்தார்.

காலை 7.10 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் யாழ்தேவி, காலை 6.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படும்
முற்பகல் 11.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து செல்லும் நகர் சேர் கடுகதி முற்பகல் 10.10 மணிக்கு புறப்படும் அதேநேரம்,

இரவு நேர தபால் 7.05 மணிக்கு சென்ற புகையிரதம், இரண்டாம் திகதி முதல் இரவு 7.00 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X