2025 மே 19, திங்கட்கிழமை

காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை

Thipaan   / 2015 மார்ச் 31 , மு.ப. 06:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்    

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேசங்களில் காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கையொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (29) பிற்பகல் முன்னெடுக்கபட்டது.

இதன் போது 35 ஆம் கிராம, கன்னியம்மை காட்டு போன்ற பிரதேசத்தில் காணப்பட்ட யானைகள்  நவகிரி காட்டுப்பகுதி நோக்கி விரட்டப்பட்டன.

அண்மைக் காலமாக படுவான்கரை பிரதேசத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் செய்து உயிரிழப்புக்களையும் சொத்துச் சேதங்களையும் ஏற்படுத்திவந்தன,

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், காட்டு யானைகளை விரட்டுமாறு கோரி போரதீவுப்பற்று பிரதேச செயலகம் முன்பாக கடந்த 20ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியிருந்தனர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய குறித்த பிரதேசத்தில் இருந்து காட்டு யானைகளை விரட்டுவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினால்,  ஆர்ப்பாட்டக்காரர்களிடம் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

இதற்கு அமைவாகவே இந்த நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (29) முன்னெடுக்கப்பட்டதாக குறித்த நடவடிக்கைக்கு தலைமை தாங்கிய மட்டக்களப்பு வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகத்தர் என்.சுரேஸ்குமார் தெரிவித்தார்.

மீண்டும் கிராமங்களுக்குள் காட்டு யானைகள் வராமலிருக்க, அப்பகுதியில் இயங்காத நிலையிலுள்ள யானை பாதுகாப்பு மின்சார வேலைகளை புனரமைக்கவும் அவற்றைப் பராமரிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X