Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2015 மார்ச் 31 , மு.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன், யோ.சேயோன், பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளராக பதவிவகித்த எம்.எஸ். சுபைருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் சபையில் இன்று நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 19 உறுப்பினர்களும் எதிராக 11 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 11 மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர்.
புதிய பிரதித் தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 11 மாகாண சபை உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து தமது எதிர்ப்பை தெரிவித்து எதிர்க்கட்சி வரிசையில் இருந்து செயற்படத் தொடங்கியுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025