Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 31 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
வடக்கு, கிழக்கில் முதியோர் இல்லங்கள் இருக்கக்கூடாது. முதியோர் இல்லங்களை உருவாக்கும் குழந்தைகள் எமக்குத் தேவையற்றவர்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், செவ்வாய்க்கிழமை (31) தெரிவித்தார்.
மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கல்லடி, திருச்செந்தூர் பகுதி முதியோர் சங்கத்துக்கான புதிய கட்டடம் செவ்வாய்க்கிழமை (31) திறந்துவைக்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கோவிந்தன் கருணாகரம்,
இப்பகுதி முதியவர்களுக்கு தங்களுக்கான கட்டடம் இல்லாத நிலையில் கடந்த காலத்தில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிவந்தனர்.
முதியவர்களினாலும் சாதிக்கமுடியும் என்பது இந்தக் கட்டடத்தை அமைத்து, திறந்துவைத்ததன் மூலம் கல்லடி முதியோர் சங்கத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர்.
யுத்த காலத்துக்குப் பின்னரே இந்த முதியோர் சங்கங்கள், வயோதிபர் இல்லங்கள் தோன்றியுள்ளன. வட, கிழக்கு பிரதேசங்களைப் பொறுத்தவரையில் முதியோர் இல்லங்கள் இருக்ககூடாது என்பது எனது கருத்தாகும். அவ்வாறு முதியோர் இல்லங்கள் இருந்தால் அவர்களின் குழந்தைகள் இந்த நாட்டுக்கு தேவையற்றவர்கள் என்றே நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்தார்.
கல்லடி, திருச்செந்தூர் முதியோர்களின் வேண்டுகோளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் நிதியொதுக்கீட்டில் இந்த முதியோர் சங்கத்துக்கான புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை மற்றும் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025