2025 மே 19, திங்கட்கிழமை

சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாநாடு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலகத்தின்  ஏற்பாட்டிலும்  அப்பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தலைமையிலும் நேற்று செவ்வாய்க்கிழமை  சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாநாடு நடைபெற்றது.

வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்படும் அரச செயற்றிட்டங்களுக்கு மேலதிகமாக வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் அறிந்து, அவற்றுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளை  காண்பதே இத்தகைய சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாநாடு நடத்தப்படுவதன் நோக்கம் என்று வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

சுயதொழில் முயற்சியினூடாக நீடித்து நிலைக்கக்கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்து குடும்பத்தின் அபிவிருத்தியிலும் பிள்ளைகளின் கல்வியிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும் போஷாக்கு நிறைந்த சிறந்த சுகாதார பழக்கவழக்கங்களை கொண்ட சமுதாயத்தை  உருவாக்குவதுமே இந்த மாநாட்டின் குறிக்கோளாகும் என்றும் அவர் கூறினார்.

இந்த மாநாட்டில்  சுயதொழில் முயற்சியாளர்களுக்கான மாநாட்டு பிரகடனமும்  வெளியிட்டுவைக்கப்பட்டது.

அந்தப் பிரகடனத்தில்,

'அனைத்து முயற்சியாளர்களுக்கும் சுயதொழில் செய்வதற்கான உரிமை, சுயதொழிலின் தன்மையை  கொண்டு அதற்கான காணித்துண்டு ஒன்றை கோரி பெற்றுக்கொள்ளும் உரிமை, சுயதொழில் முயற்சியாளர்கள் நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது வியாபாரத்திட்டம் ஒன்றை  அங்கிகரிக்கச் செய்தல், குறைந்த மாதாந்த வட்டி அடிப்படையில் கடன்; பெற்றுக்கொள்ளும் உரிமை, அனைத்து சுயதொழில் முயற்சியாளர்களையும் வலுப்படுத்தல், சம வாய்ப்பு மற்றும் சம அந்தஸ்த்து வழங்கச் செய்தல் ஆகிய வியடங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

மாநாட்டை தொடர்ந்து சுயதொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டதுடன், விற்பனையும் நடைபெற்றது.

வாகரை பிரதேச செயலகம் 2015 ஐ சுயதொழில் முயற்சியாளர்களுக்கான ஆண்டாகப் பிரதேச மட்டத்தில் பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், கரையோரம் பேணல் திணைக்கள திட்டப் பணிப்பாளர் கே.கோகுலதீபன் உட்பட பல்வேறு அரச, அரசசார்பற்ற  நிறுவனங்களின் துறைசார் நிபுணர்கள் சிறுதொழில் உற்பத்தியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

+65


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X