Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளராகவிருந்த எம்.எஸ்.சுபைருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, நேற்று செவ்வாய்க்கிழமை (31) நிறைவேற்றப்பட்டு அவர் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்ட அதேவேளை, அப்பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாணசபை தவிசாளர் சந்திரதாச கலபதி தலைமையில் மாகாணசபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்றது. இதன்போது, மாகாணசபையின்; பிரதி தவிசாளராக இருந்த எம்.எஸ்.சுபைருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவாம் இந்த பிரேரணையை கொண்டுவந்தார். இந்நிலையில் இதற்கு ஆதரவாக 19 உறுப்பினர்களும் எதிராக 11 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதனைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பதவியிலிருந்து எம்.எஸ்.சுபைர் நீக்கப்பட்டார். புதிய பிரதி தவிசாளராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவுசெய்யப்பட்டார்.
கடந்த மாகாணசபை அமர்வின்போது சபைத் தவிசாளர் இல்லாத நிலையில் சபையை கூட்டுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்திருந்தார். இருப்பினும், அதனை புறந்தள்ளிவிட்டும் சபை நடவடிக்கைகளை புறக்கணித்ததுடன், மாகாணசபை அமர்வுக்கு தலைமை தாங்கும் பொறுப்பிலிருந்து தவறியிருந்தார் என்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே எம்.எஸ்.சுபைருக்கு எதிராக பிரதான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டதாக மாகாணசபை உறுப்பினர் ஆர்.துரைரெட்ணம் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
18 May 2025
18 May 2025