2025 மே 19, திங்கட்கிழமை

ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்கு தடை

George   / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்தில் இந்த வாரம் முதல், ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.சிறிகிருஸ்ணராஜா தெரிவித்தார்.

இதற்கான சுற்றுநிருபங்கள், வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் கல்வி நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த வலயக்கல்விப்பணிப்பாளர், இதனை மீறும் தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றும் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X