Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 01 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் பாடசாலைகளில் இணையத்தளம் மூலம் பார்வையிடப்பட்டு கிடைக்கப்பட்ட தற்காலிக முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு, மண்முனை வடக்கு கோட்டத்தில் 49 மாணவர்கள் 09 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக, மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் அ.சுகுமாரன் தெரிவித்தார்.
வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக பாடசாலைகளுக்கு இதுவரை வந்து சேராத நிலையில், இணையத்தளங்களில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இவை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் எட்டுப்பாடங்களில் ஏ சித்திகளைப்பெற்றுள்ளதாகவும் கோட்டக்கல்வி பணிப்பாளர் தெரிவித்தார்.
இதன்கீழ், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 24 மாணவர்கள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன் புனித மைக்கேல் கல்லூரியில் 12 மாணவர்கள் 09 பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 08 மாணவிகள் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதுடன், மத்திய கல்லூரி சிவானந்தா தேசிய பாடசாலை ஆகியவற்றில் இரண்டு மாணவர்களும் கல்லடி, உப்போடையில் ஒரு மாணவியும் ஒன்பது பாடங்களில் ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த பெறுபேறுகள் அதிகரிக்கலாம் எனவும் பாடசாலைகளுக்கான முடிவுகள் வந்ததன் பின்னர் பூரண விபரங்கள் வெளியிடப்படும் எனவும் கோட்டக்கல்வி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
18 May 2025
18 May 2025