Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 01 , பி.ப. 01:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட மாணவர்கள், எதிர்வரும் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் தனியார் வகுப்புக்களுக்கு செல்வதைத் தடுக்கும் உத்தரவைத் தான் பிறப்பித்திருப்பதாக கல்குடா கல்வி வலயப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீ கிருஸ்ணராஜா தெரிவித்தார்.
இதற்கான அறிவுறுத்தல்களை வலயத்திலுள்ள பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கும் வழங்கியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த அறிவுறுத்தலை மீறி ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலை மாணவர்களை ஒன்று கூட்டி வகுப்புக்கள் நடத்தப்படுமாயின், அத்தகைய தனியார் கல்வி நிலைய முகாமையாளர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கல்குடா கல்வி வலயத்திலுள்ள மாணவர்கள் சமயபாடத் தேர்வுகளில் பின்தங்கியிருப்பதனால், இந்தக் கல்வி வலயத்தில் மேற்படி ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புத்தடை செய்யப்பட்டு அதற்குப் பதிலாக அறநெறி வகுப்புக்களுக்குச் செல்லுமாறு மாணவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீகிருஷ்ணராஜா தெரிவித்தார்.
ஆன்மீக அறநெறிக் கொள்கைகள் நெறி பிறழ்ந்து இளம் சமுதாயத்தனரின் சமுதாய நடத்தைகள் சீர்கெட்டுள்ளது. இதனை மறுசீரமைக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
18 May 2025
18 May 2025