2025 மே 19, திங்கட்கிழமை

பொன். செல்வராசா எம்.பி.யின் வாகனம் விபத்து

George   / 2015 ஏப்ரல் 01 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா பயணித்த வாகனம், புதன்கிழமை(01) பிற்பகல் மட்டக்களப்பு கல்லடியில் விபத்துக்குள்ளானது. 

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த வேளை, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

விபத்தில் தனக்கும் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்பட வில்லையென பொன் செல்வராசா தெரிவித்தார். 

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து நடைபெற்ற இடத்துக்கு வருகைதந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவினர், விபத்து குறித்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X