2025 மே 19, திங்கட்கிழமை

எம்.பி.யின் வாகனத்தில் மோதுண்ட முதியவர் மரணம்

Administrator   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன், வா.கிருஸ்ணா


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பேச்சியம்மன் கோயிலடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர் மரணமடைந்து விட்டதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி இசை நடனக் கல்லூரி வீதியைச் சேர்ந்த நல்லதம்பி கணேசலிங்கம் (வயது 62) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா பயணம் செய்து கொண்டிருந்த வாகனத்திலேயே முதியவர் பகல் 2 மணியளவில் மோதுண்டுள்ளார். வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர், புதன்கிழமை இரவு 7.30 மணியளவில் இறந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த வாகத்தின் சாரதியை கைது செய்துள்ள காத்தான்குடிப் பொலிஸார்,  எம். பி பயணித்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

வாகன சாரதி குமாரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முதியவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X