2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விவசாயியை காணவில்லையென முறைப்பாடு

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

தவளக்கடை வயலுக்கு சென்ற விவசாயி ஒருவரை காணவில்லை என்று அவ்விவசாயின் மனைவி புதன்கிழமை (31) இரவு தம்மிடம்  முறைப்பாடு செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை 1 சி பிரிவை சேர்ந்த தாமோதரம் பிள்ளையான் தம்பி (வயது 60) என்பவரே  புதன்கிழமை (01) மாலையிலிருந்து காணாமல் போயுள்ளார் என்று  முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி விவசாயின் சைக்கிள்;, கல்முனை உவெஸ்லி பாடசாலை மதிலோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

வழமையாக வயலுக்கு சென்று மாலை  வேளையில் வீடு திரும்பும் இவர், நகரத்திலுள்ள மதுபானச்சாலை ஒன்றில்  மதுபானத்தை  வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதாகவும் ஆனால்,  புதன்கிழமை (01) வயலுக்கு சென்ற தனது  கணவர் வீடு திரும்பாத நிலையில் அவரது சைக்கிள் மாத்திரமே கண்டெடுக்கப்பட்டதாகவும் அவரது  மனைவி முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X