Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 22 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி சிகரெட்டுக்களை கல்முனை, கடற்கரைப்பள்ளி பிரதேசத்திலிருந்து மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று கல்முனை பொலிஸ் புலனாய்வு அதிகாரி சுபைர் அப்துல் ஜவாத் தெரிவித்தார்.
தமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், கடற்கரைப்பள்ளி வீதியிலுள்ள வீடொன்றை நேற்று புதன்கிழமை இரவு சோதனையிட்ட போது 110,400 சட்டவிரோத சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டன என்றும் அவர் கூறினார்.
இவற்றின் இலங்கைப் பெறுமதி சுமார் 22 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கல்முனை கடற்கரைப்பள்ளி வீதியிலுள்ள வீட்டு உரிமையாளர் ஆதம்பாவா சேகு சிக்கந்தர் ஹஸன் (வயது 53) என்ற நபர் விசாரிக்கப்பட்டு வருகின்றனார்.
இவர் நீண்டகாலமாக குறித்த வீட்டை சட்டவிரோத கொள்வனவுப் பொருட்களைக் களஞ்சியப்படுத்தும் இடமாகப் பாவித்து வந்துள்ளார் என்பது தெரியவந்திருப்பதாக பொலிஸ் அதிகாரி மேலும் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
7 hours ago
7 hours ago
18 May 2025