Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன்
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தருக்கு பதிலாக அப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கவனிப்பதற்கு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமி மார்ச் 31ஆம் திகதியிலிரு;நது நியமிக்கப்பட்டுள்ளதாக அதி விஷேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சரத் அமுனுகமவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழக அலுவல்களின் நிர்வாகம் பாரதூரமாக சீர்குலைந்துள்ளது. அப்பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் வழமையான அலுவல்களை மீள நிலைநாட்டுவதற்கு தவறியுள்ளனர்.
எனவே, 1978ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க 20 (4) பிரிவின் பல்கலைக்கழக சட்டத்தின் பிரகாரம் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களைக் கொண்டு பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சீராக மேற்கொள்ளும் பொருட்டு தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர் உமா குமாரசாமியை நியமிக்கின்றேன் என்று அந்த விஷேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே உபவேந்தராக பதவி வகித்த கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜாவின் நியமனம் மார்ச் மாதம் 04ஆம் திகதி முடிவடைந்திருந்தது.
பேராசிரியர் உமா குமாரசாமி ஏற்கெனவே கிழக்கு பல்கலைக்கழகத்தில் பீடாதிபதியாகவும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவும் கடமையாற்றியவர்.
தற்சமயம் இவர் உலக வங்கி மற்றும் பொதுநலவாயம் ஆகிய அமைப்புக்களின் ஆலோசகராகவும் இருந்து வருகின்றார்.
பல்கலைக்கழகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரி நியமனம் என்பது சட்டத்தின் அடிப்படையில் வழமையாக மூன்று மாதங்களுக்குரியதேயாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago