2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பில் வீடற்ற நிலையை உருவாக்க திட்டம்

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 02 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

கடந்த காலத்தில் மட்;டக்களப்பு மாவட்டம் பல பாதிப்புகளை எதிர்கொண்டதால்,  எதிர்காலத்தில்  இந்த மாவட்டத்தில் வீடற்ற நிலையை ஏற்படுத்தவதற்கான விசேட திட்டத்தை  உருவாக்கவுள்ளதாக சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

எனது தனிப்பட்ட திட்டம் ஊடாக இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர், இதற்கு அனைத்து சமூகமும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடுகள் இல்லாத 1,200 பேருக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கான நிதி வழங்கும் நிகழ்வு,  களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில்   இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் வீடுகள் அற்றோர் இல்லாத தேசத்தை  கட்டியெழுப்பும் 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,200 வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இதன் கீழ் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் உள்ள களுவாஞ்சிக்குடி, போரதீவுப்பற்று, பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் வீடுகள் அற்ற குடும்பங்களுக்கே  நிதி வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு பிரதியமைச்சர் எம்.எஸ்.அமீர்அலி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் உதவி பொதுமுகாமையாளர் லலித் எதிரிசிங்க, பட்டிப்பளை பிரதேச செயலாளர் வி.சிவப்பிரியா, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,200 வீடுகளை அமைப்பதற்காக முதல் கட்டமாக 21மில்லியன் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தெரிவித்தார்.

இதன் கீழ் முதல் கட்டமாக களுவாஞ்சிகுடி, போரதீவுப்பற்று பட்டிப்பளை ஆகிய பிரதேசங்களில் வீடுகள் அற்ற 300 குடும்பங்களுக்கான முதல் கட்ட நிதி வழங்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக பட்டிருப்பு தொகுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளதாகவும் நாளை மட்டக்களப்பு தொகுதிக்கான நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X