Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்களை கிழக்கிலங்கைக்கு அழைத்து வந்து முதலீடு செய்து, வேலைவாய்ப்பின்றியுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தனியார் நிறுவனங்களை அமைத்து அதன் மூலமும் தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டம் கிழக்கு முதலமைச்சரால் மேற்கொள்ளப்படுகிறது.
இது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் கேட்போர் கூடத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தௌபீக், முதலமைச்சரின் பிரத்தியேக செயளார் க.பத்தமநாதன் உட்பட ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது விவசாயம், மீன்பிடி, சுற்றுலா துறைகளின் அபிவிருத்தி மூலம் பல வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலம் வேலையில்லா பிரச்சினைக்கு தீர்வு காணலாம் எனவும் இதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற ரீதியில் சகல ஒத்துழைப்புக்களும் வழங்க நான் தயாராக உள்ளேன் என்று முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் இதன்போது தெரிவித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago