Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
பொது இடங்களில் இலவச Wi-Fi சேவையை வழங்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, செங்கலடி பொது நூலகத்திலும் கடந்த புதன்கிழமை (01) முதல் இந்த இலவச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என நூலகர் கே.கார்த்தியாயினி தெரிவித்தார்.
நூலகத்துக்கு வருகை தரும் வாசகர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி இலவசமாக இணைய வலையமைப்பு தொடர்புகளை மேற்கொண்டு பயன்பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த நூலகத்துக்கு அருகில் கிழக்குப் பல்கலைக்கழகம் இருப்பதால் அங்கு கற்கும் அதிகளவான மாணவர்கள் தினமும் இந்த நூலகத்துக்கு வருகின்றனர்.
அவர்கள் இனிமேல் இங்கிருந்தவாறு இந்த இலவச இணைய வலையமைப்பு சேவை மூலம் சர்வதேச தகவல்களையும் ஒரே இடத்தில் பெற்று அதிக நன்மையடைய முடியும் என்றும் கார்த்தியாயினி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், செங்கலடிப் பிரதேச சபையின் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை, செங்கலடி நூலகர் கே. கார்த்தியாயினி, நிர்வாக அதிகாரி எஸ்.மகேந்திரன், சனசமூக அபிவிருத்தி அதிகாரி இந்துமதி விமல்ராஜ், ஆறுமுகத்தான்குடியிருப்பு நூலகர் ரீ.ராணி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
செங்கலடி நூலகத்தில் சுமார் 5000 நூல்கள் உள்ளன. இந்த நூலகத்தை இலத்திரனியல் நூலகமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago