2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

300 கிணறுகளில் மீன்குஞ்சுகள் விடப்பட்டன

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான முறையில் இருந்த 300 வீடுகளின் கிணறுகளுக்குள் மீன்குஞ்சுகள் விடப்பட்டதாக கோட்டைமுனை பகுதி பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தெரிவித்தார்.

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை  முன்னிட்டு நேற்றுமுன்தினம்  புதன்கிழமை வரை 1,300 வீடுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது, நுளம்பு பெருக்கத்துக்கு  ஏதுவாக சுற்றாடலை வைத்திருந்த 22 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தின்போது மக்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள், விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X