Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வா.கிருஸ்ணா
எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழருக்கு வழங்கக்கூடாது என்று தடுக்கும் பேரினவாதம், எப்படி வட, கிழக்கு அரசியல் தீர்வு வழங்க முன்வருவார்கள் என்பதை நாம் சிந்திக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மேற்கு வலய பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை மெய்வல்லுநர் திறனாய்வு விளையாட்டு விழா நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'தற்போது நாடாளுமன்றத்தில் தேசிய அரசாங்கம் அமைந்துள்ளதாக ஒருசாரார் கூறுகின்றனர். நல்லாட்சி நடைபெறுவதாக இன்னுமொரு சாரார் கூறுகின்றனர். ஆனால், என்னை பொறுத்தமட்டில் இந்த இரண்டு ஆட்சிகளும் இங்கில்லை.
தேசிய அரசாங்கம் என்றால், எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவி இருக்கத்தேவையில்லை. நல்லாட்சி என்றால், கடந்த அரசில் ஊழல் செய்ததாக சந்தேகிக்கப்பட்ட பெயர் வழிகள் சிலர் மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு நல்லாட்சி என்று கருதமுடியும்.
ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பொதுசன ஐக்கிய முன்னணியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சுமார் 28 உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த எதிர்க்கட்சி நிலையில் இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. அவ்வாறாயின், எதிர்க்கட்சி தலைவர் பதவி கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கே தார்மீக ரீதியாக சபாநாயகரால் அறிவிக்கப்படவேண்டும்.
ஆனால், 'சம்பந்தன்' என்ற பெயர் 'சம்பிக்க' என்று இருக்குமானால் சில வேளைகளில் இனவாதிகள் ஏற்றுக்கொண்டிருப்பர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்; தமிழர் என்பதால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கவிடாமல் தடுப்பதற்காக இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரின்; கையொப்பத்தை நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச உட்பட பலர் கையொப்பமிட்டு சபாநாயகரிடம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறான செயல் நாடாளுமன்ற நடைமுறைக்கு முற்றிலும் முரணான செயல். எதிர்க்கட்சி தலைவர் என்பது நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் பல கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தால் அடுத்த நிலையில் எதிர்த்தரப்பில் கூடிய உறுப்பினர்களை எந்தக்கட்சி வைத்துள்ளதோ, அது எதிர்க்கட்சி அந்தஷ்தை தானாக பெறும். அவ்வாறு தற்போது இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே. 13 ஆசனங்களை கொண்ட கட்சியாகும். இதன் முடிவு எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி எதிர்பார்கின்றோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago