Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
இந்த நாட்டில் மாற்றத்தை நோக்கிய பயணத்தை படித்து தந்தவர்கள் பொதுமக்களே என்று வீடமைப்பு மற்றும் சமுர்த்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் அடிப்படையில், வீடமைப்பு மற்றும் சமுர்த்தி அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1,200 பேர் வீடுகளை கட்டுவதற்கான காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு டோபா மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'அரசியல்வாதிகள் கூறி மாற்றத்துக்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்பதுடன், அவர்கள் கூறிய விடயங்களையும் மக்கள் கேட்கவில்லை. இந்த நாட்டில் மாற்றமொன்றை கொண்டுவரவுள்ளதாக மக்களே தெரிவித்தார்கள்.
கடந்தகால ஆட்சியாளர்களை வீழ்த்தப்போகின்றோம் என்பதை பொதுமக்களே தெரிவித்திருந்தார்கள். அவ்வாறான சிந்தனையில் மக்கள் இருக்கமுடியுமாயின், குடும்பங்களில் மற்றும் வீடுகளில் ஏன் சிறந்த பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்று கேட்க விரும்புகின்றேன். இதற்கு விடா முயற்சி வேண்டும். அது வெற்றி தரும். இயலாது என்பது யாரிடமும் கிடையாது.
போதைவஸ்து பாவனையிலிருந்து சமூகத்தை பாதுகாக்க சேண்டிய தார்மீகப் பொறுப்பு அனைவரிடமும் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தை பாதிக்கும் விடயமாக போதைவஸ்து பாவனை உள்ளது. இந்த மாவட்டத்திலுள்ள அரச தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இதை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பிரதேச செயலாளர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago