Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.எல்.ரி.யுதாஜித்
இன்றைய காலத்தில் தமிழ் இனத்தின் பலம் கல்வியிலேயே தங்கியுள்ளது. கல்வி இல்லாது விட்டால் எமது சமுதாயத்துக்கு எந்தப் பலாபலனையும் பெற்றுக்கொடுக்க முடியாது என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட உதயன்மூலை பாடசாலையில் நேற்று வியாழக்கிழமை (02) மாலை இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'இதுவரை காலமும் எமக்காக மட்டும் படித்திருந்தாலும், இனி எமது சமுதாயத்துக்காகவும் படிக்க வேண்டும். இவ்வறு செயற்படும்போதே எமது இனத்தை முன்நிலைக்கு கொண்டுவர முடியும்.
ஆசிரியர்கள் தமக்குள் இருக்கும் கல்வியை, தாங்கள் கற்றதை மாணவர்களுக்கு ஊட்டி அவர்களை தாமாகவே முன்வரச் செய்வதே கல்விச் செயற்பாடு. கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு ஊன்றுகோலாக விளங்குகின்றது. ஏழைகளின் முக்கிய பலமும் அது. கல்வியின் மூலம் சமூதாயத்தில் உயர்ந்த இடத்தை பெறமுடியும். அது மாணவர்களுக்கு மட்டுமல்லாது, பெற்றோருக்கும் எமது சமூகத்துக்கும் பெருமையை தேடித் தரும். மாணவர்கள் உறுதியுடன் இதற்கான கனவை காண வேண்டும்.
நாம் சாப்பிடுவதற்கு மட்டும் பிறந்தவர்கள் அல்லாமல், சாதிக்கவும் பிறந்தவர்கள் என்பதை சமூகத்துக்கு வெளிப்படுத்தும் அளவுக்கு எமது செயற்பாடுகள் இருக்கவேண்டும். பூவில் இருந்து ஒரு வண்ணத்துப்பூச்சி எவ்வாறு தேனை உறிஞ்சி எடுக்கின்றதோ, அதுபோல் மாணவர்களும் புத்தகம் எனும் பூவில் இருந்து கல்வி எனும் தேனை தேடி உறிஞ்சிக் குடிக்க வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago