2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசலுக்கு சென்ற சிறுமி துஷ்பிரயோகம்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கல்முனை, கடற்கரைப் பள்ளிவாசல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளச் சென்றிருந்த சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று கடந்த புதன்கிழமை (01) இரவு இடம்பெற்றுள்ளது.

7 வயதான மேற்படி சிறுமி, தனது பாட்டியுடன் கடற்கரைப் பள்ளிவாசல் வருடாந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த சமயம் திடீரென காணாமல் போயுள்ளார்.

உடனடியாக அங்கு நின்றவர்களின் உதவியை நாடியபோது, மையத்துப்பிட்டி பஸ் நிறுத்துமிட மறைவில் மேற்படி சிறுமி, இளைஞரொருவரால் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. உடனடியாக அவ்விடத்தில் கூடிய பொதுமக்கள், சிறுமியை மீட்டதுடன் அவ்விளைஞனையும் பிடித்து பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

சிறுமி தற்போது கல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வாழைச்சேனை புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த இஷ்ஹாக் பாறூக் (வயது 28) என்ற இளைஞன், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

சிறுமியின் தாய், அச்சிறுமியை பாட்டியின் பொறுப்பில் விட்டு விட்டு மத்திய கிழக்கு நாடொன்றில் வீட்டுப் பணிப்பெண் வேலைக்காகச் சென்றுள்ளார் என தெரியவருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X