Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
1990ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் பின்னர் ஏறாவூர்ப் பிரதேசம், கல்வி மற்றும் பொருளாதார சவால்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளதாக ஏறாவூர் நகரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பெரிய தொழுகையின் பின்னர் இந்தத் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
'தேசத்தின் நேசர்கள்' என்று உரிமை கோரப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அந்தப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இப்பிரதேசம் எதிர்கொண்ட பாரிய சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய வகையில், ஆண்களுக்கு நிகராக இப்பிரதேசத்தின் பெண்களும் கடினமாக உழைத்து பொருளாதாரத்தைத் தேடுவதில் பங்களிப்புச் செய்ததால் சிறிது சிறிதாக ஏறாவூர் முன்னேற்றம் கண்டுள்ளது.
எனினும், மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று அயராது பாடுபட்டு உழைத்த பெண் சமூகத்தின் வாழ்வாதாரத்தை உள்ளூரிலேயே வளப்படுத்தக் கூடிய வழிவகைகள் இன்னமும் ஆக்கபூர்வமாக மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்தமளிக்கின்றது.
இன்கலவர பாதிப்பின் பின்னர் ஏற்பட்ட வறுமை காரணமாக பாடசாலைக் கல்வியை இடைநிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்ட இளைஞர் யுவதிகள் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று தமது இளைஞர் சக்தியை விரயம் செய்கின்றனர்.
வெளிநாடுகளில் பிரயோகிக்கப்படும் நமது இளைஞர் சக்தி உள்ளூரிலும் உள்நாட்டிலும் பயன்படுத்தப்படுமாக இருந்தால் அதுவே சமூகத்தினதும் நாட்டினதும் நிரந்தர பொருளாதார விமோசனத்துக்கு வழிவகுக்கும்.
உயர்தரத்தில் சித்தியடையாதவர்களை ஒதுக்கும் கொள்கையை அரச மற்றும் தனியார் துறையினர் கடைப்படிப்பதால் நமது இளைஞர் சக்தி அந்நிய நாட்டிலுள்ளவர்களின் வளமான வாழ்வுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
நமது பிரஜைகளின் வளமான சக்தி அந்நிய நாட்டிலுள்ளவர்களுக்காய் பயன்படுத்தப்படுவதைப் பற்றி நமது உள்ளூர் அரசியல் வாதிகளில் பெரும்பாலானோர் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவில்லை என்பது வருத்தமளிக்கின்றது.
எனவே அதுபற்றி அரசியல்வாதிகள் தொடக்கம் அக்கறையுள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago