2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் தெரிவு

Gavitha   / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக ஏ.எல்.எம்.நியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்ற பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்தின் போதே, நியாஸ் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2015ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாகத்தெரிவும் இதன்போது நடைபெற்றது.

இதன்போது காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஏ.எல்.எம்.நியாசும் செயலாளராக பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹியும் பொருளாளராக எம்.ஐ.எம்.சிஹாபும் அமைப்பாளராக எம்.எம்.எம்.பைஸூம் உப தலைவராக எம்.எம்.எம்.ஜெஸீரும் உப செயலாளராக எம்.ரீ.எம்.இர்பானும் உப அமைப்பாளராக எம்.ஆர்.எப்.அதீகாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் காத்தான்குடி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி தலைமையில்,  நடைபெற்ற இந்நிருவாகத் தெரிவில், காத்தான்குடி பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி.ஜெ.கலாராணி, மட்டக்களப்பு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தகவல் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.மகேந்திரராசா, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி கே.குகதாஸ் உட்பட காத்தான்குடி பிரதேசத்திலுள்ள இளைஞர் கழகங்களின் தலைவர்கள, செயலாளர்கள், பொருளாளர்கள்,   அமைப்பாளர்கள் உப தலைவர்கள், உப செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X